இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.  இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். 

அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்ற தகவல் வெளியாகினது.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி போது பேசிய முகமது ஷமி, "நான் எப்போது திரும்பி வருவேன் என்று சொல்வது கடினம். நான் கடினமாக முயற்சி செய்கிறேன், ஆனால் நான் மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதற்கு முன்பு நீங்கள் என்னை பெங்கால் நிறத்தில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் பெங்கால் அணிக்காக இரண்டு-மூன்று போட்டிகளில் விளையாடியதன் பிறகும், அடுத்த தொடருக்காக முழுமையாக தயாராக வருவேன். மேலும் எனது காயம் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நான் உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அது குணமடைய இவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை மருத்துவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News