Bengal cricket team
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பி தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on Bengal cricket team
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
மத்திய பிரதேசம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடமால் இருந்த முகமது ஷமி, மத்திய பிரதேச அணிக்கு எதிரான தனது கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: பெங்கால் அணியில் இணைந்த முகமது ஷமி!
நாளை நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்தியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
கடந்த 2011 ஆம் ஆண்டு நான் சதம் அடித்த பிறகும் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அப்போதைய கேப்டன் தோனியிடம் கண்டிப்பாக கேட்பேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24