இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. 

Advertisement

இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாடு திரும்பவுள்ளார். சிராஜிற்கு மாற்று யார் என்பதை இன்னமும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஒருநாள் அணிக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜெய்ஷ்தேவ் உனாத்கட், உம்ரான் மாலிக், ஷர்தூல் தாகூர், புதுமுக பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் இருக்கிறார்கள்.

Advertisement

இதில், முகமது சிராஜிற்கு மாற்றாக முகேஷ் குமார் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 150+ வேகத்தில் பந்துவீசியிருக்கிறார். தற்போது, வெஸ்ட் இண்டீஸி தொடரிலும் அதே வேகத்தில் பந்துவீசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

முகமது சிராஜ் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் மட்டும்தான் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அடுத்து ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை 2023, அக்டோபர் நபம்பரில் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, முகமது சிராஜின் பணிச்சுமையை குறைக்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

முகமது சிராஜ் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இடைவிடாது அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடினார். அடுத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் அனைத்து டெஸ்ட்களிலும் விளையாடிய அவர், தொடர்ந்து ஐபிஎலில் 14 போட்டிகளில் 19 விக்கெட்ளை கைப்பற்றி அசத்தினார்.

மேலும், அடுத்து நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாடினார். சிராஜ் இப்படி தொடர்ந்து விளையாடி வருவதால்தான், அவரது பணிச்சுமையை கருத்தில்கொண்டு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News