‘என் வாழ்க்கையின் சிறந்த தருணம்’: விராட் கோலியை சந்தித்து குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்!

Updated: Wed, Mar 20 2024 19:53 IST
‘என் வாழ்க்கையின் சிறந்த தருணம்’: விராட் கோலியை சந்தித்து குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 44 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்து. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர். 

இந்நிலையில் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஆர்சிபி அணியின் ஷ்ரேயங்கா பாட்டிலும் கைப்பற்றினார். இதையடுத்டு கோப்பையை வென்ற ஆர்சிபி மகளீர் அணிக்கு அநத அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

 

இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்நிலையில் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷ்ரேயங்கா பாட்டில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, என் வாழ்க்கையின் சிறந்த தருணம் என பதிவுசெய்துள்ளார். 

இதுகுறித்து ஷ்ரேயங்கா பாட்டில் தனது எக்ஸ் தள பதிவில், அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான். அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன். நேற்று இரவு, என் வாழ்வின் மிகசிறப்பு வாய்ந்த தருணம் இருந்தது. விராட் கோலி என்னை நோக்கி, "ஹாய் ஷ்ரேயங்கா, நன்றாக பந்துவீசினாய்" என்றார். உண்மையில் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது” என ஆச்சரியமாக பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் இப்பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை