16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது . குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன . நேற்று நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது . இந்த இறுதிப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணி நடப்புச் சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது . குஜராத் அணியும் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .

Advertisement

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் முதலிடம் வகித்த குஜராத் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த அணி சென்னை அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .

Advertisement

நேற்று அகமதாபாத் நகரில் பெய்த கனமழையால் இறுதிப்போட்டி நடைபெறவில்லை . இன்று குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும் . குஜராத் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என பாராட்டி பேசி இருக்கிறார் . 

இது குறித்து பேசிய மூடி, “எம்எஸ் தோனி தான் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன் அது ஏன் என்பதற்கான காரணத்தை இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர் நமக்கு காண்பித்திருக்கிறார் . டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நான் தோனியை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல மாட்டேன் . ஆனால் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் அவர்தான் சிறந்த கேப்டன்.

கடந்த 50 வருட கால கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி தான் சிறந்த வெள்ளைப் பந்து கேப்டன் என நான் கருதுகிறேன் . ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை பற்றி அவரது புரிதலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் தன்மையும் அபாரமாக இருக்கிறது . இந்த வருடத்தில் அவர் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கான பல உதாரணங்களை நமக்கு தந்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News