ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!

Updated: Wed, Jun 04 2025 16:19 IST
Image Source: Google

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசயில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் தொடரும் நிலையில், இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் அபிஷேக் சர்மாவும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தின் பில் சால்டும், 4 மற்றும் 5ஆம் இடங்களில் இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தொடர்கின்றனர். 

அதேசமயம் இலங்கை அணியின் குசல் பெரேரா ஒரு இடம் முன்னேறி 09ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் ரீஸா ஹென்ரிக்ஸ் 10ஆம் இடத்தையும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேசமயம் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் முகமது ஹாரிஸ் 210 இடங்கள் முன்னேறி 30ஆம் இடத்தையும், ஹசன் நவாஸ் 57 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். 

மேற்கொண்டு வங்கதேச அணியின் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் 28 இடங்கள் முன்னேறி 53ஆவது இடத்தையும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா 42 இடங்கள் முன்னேறி 75ஆவது இடத்தையும், வங்கதேச அணியின் மற்றொரு தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் 28 இடங்கள் முன்னேறி 95ஆவது இடத்திற்கும் முன்னேறிவுள்ளனர். 

டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தமட்டில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமுல் இல்லாமல், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி 3ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய் 7அம் இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 10ஆவது இடத்திலும் தொடர்ந்து வருகின்றனர்.

இதில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆன்ட்ரிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 4 இடங்கள் முன்னேறி 18 மற்றும் 19ஆவது இடத்தையும், பாகிஸ்தானின் அப்பாஸ் ஆஃப்ரிடி 18 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தையும், ஷதாப் கான் 24 இடங்கள் முன்னேறியும், அப்ரார் அஹ்மத் 45 இடங்கள் முன்னேறியும் கூட்டாக 59ஆவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

டி20 அல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் ஷதாப் கான் 10 இடங்கள் முன்னேறி  14ஆம் இடத்தையும், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் 17 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தையும், தன்ஸிம் ஹசன் ஷாகிப் 51 இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை