ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் முன்னேறின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷான் ஷராஃபு - கேப்டன் முகமது வசீம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலிஷான் ஷராஃபு 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஷ்னு சுகுமாறனும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் முகமது வசீம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 100 ரன்களில் முகமது வசீம் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் கான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிலால் கன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணியில் காஷ்யப் பிரஜபதி, நசீம் குஷி, அகிப் இலியாஸ், ஸிஷான் மக்சூத், அயான் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த கலித் கைல் - பிரதிக் அதவலே இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கலித் கைல் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதிக் அதவலே 49 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. 

இப்போட்டியில் சதமடித்து அசத்திய முகமது வசீம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் சதமடித்ததன் மூலம் முகமது வசீன் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட் தொடர்களின் இறுதிப்போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்களில் இரண்டு சதங்களை விளாசி முகமது வசீம் சாதனை படைத்துள்ளார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News