WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Tue, Feb 27 2024 22:48 IST
Image Source: Cricketnmore

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, அலிசா ஹீல் தலைமையிலான உபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 03
  • யுபி வாரியர்ஸ் - 01

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் மகளிர்: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, ஷப்னிம் இஸ்மாயில், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சைகா இஷாக்.

யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி (கே), வ்ருந்தா தினேஷ், சாமரி அத்தபத்து, தஹ்லியா மெக்ராத், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா, பூனம் கெம்னார், ராஜேஸ்வரி கெய்க்வாட், சோஃபி எக்லெஸ்டோன், கௌஹர் சுல்தானா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: அலிசா ஹீலி, யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர், வ்ருந்தா தினேஷ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சாமரி அத்தபத்து, தஹ்லியா மெக்ராத், ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (துணை கேப்டன்), அமெலியா கெர் (கேப்டன்), தீப்தி சர்மா
  • பந்துவீச்சாளர்கள்: ஷப்னிம் இஸ்மையில், சோஃபி எக்லெஸ்டோன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை