ஐபிஎல் 14ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

ஆனால் பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில், நிதீஷ் ராணா இணை அதிரடியான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. பின் 33 ரன்கள் எடுத்திருந்த  நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி, மோர்கன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதீஷ் ராணா அரைசதம் கடந்து நம்பிக்கையளித்தார். பின்னர் ராணாவும் 57 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பின்னர் குர்னால், பும்ரா, போல்ட் ஆகியோரது அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேகேஆர் ஃபினீஷர்கள் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் மிடிவில் கேகேஆர் அணியால் 142 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ராகுல் சஹார் 4 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News