WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!

Updated: Wed, Feb 21 2024 11:16 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் எனும் பெருடன் களமிறங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி நடப்பாண்டு தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பவீனம், டாப் வீரர்கள் மற்றும் அணியின் அட்டவணையை இப்பதிவில் காண்போம்.

மும்பை இந்தியன்ஸ் பலம் & பலவீனம்

ஹர்மன்ப்ரித் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதிரடி பட்டாளத்தை தங்கள் அணியில் தக்கவைத்துள்ளது. அதுபோக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில், ஷப்னிம் இஸ்மாயில், அமன்தீப் கௌர், ஃபாதிமா ஜாஃபர், சஜனா சஜீவன் மற்றும் தமிழக ஆல் ரவுண்டர் கீர்த்தனா பாலகிருஷ்ணன் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், யஸ்திகா பாடியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரன்ட் என அந்த அணியின் டாப் ஆர்டர் அட்டகாசமாக இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கௌர், அமீலியா கௌர் ஆகியோர் மிடில் ஆர்டரை வலுவாக்குகிறார்கள். அவர்கள் போக இந்திய ஆல்ரவுண்டர்கள் பூஜா வஸ்திரகர், அமஞ்சோத் கௌர் ஆகியோர் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கைகொடுப்பார்கள். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் அந்த அணி சமபலத்துடன் இருக்கிறது. இந்த மும்பை அணியைப் பொறுத்தவரை பலவீனம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. 

டாப் பேட்டர்கள்

  • நாட் ஸ்கைவர்-பிரண்ட் - 10 போட்டிகளில் 332 ரன்கள்
  • ஹர்மன்ப்ரீத் கவுர் - 10 போட்டிகளில் 281 ரன்கள்
  • ஹீலி மேத்யூஸ் - 10 போட்டிகளில் 271 ரன்கள்
  • யாஸ்திகா பாட்டியா - 10 போட்டிகளில் 214 ரன்கள்
  • அமெலியா கெர் - 10 போட்டிகளில் 149 ரன்கள்

டாப் பந்துவீச்சாளர்கள்

  • ஹீ மேத்யூஸ் - 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்
  • இஸ்ஸி வோங் - 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
  • அமெலியா கெர் - 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
  • சாய்கா இஷாக் - 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
  • நாட் ஸ்கைவர்-பிரண்ட் - 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை

  • பிப்ரவரி 23: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • பிப்ரவரி 25: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • பிப்ரவரி 28: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 1: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 2: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 5: டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 7: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • மார்ச் 9: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • மார்ச் 12: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை