நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும், அதிரடியாக விளையாடக் கூடிய டி20 போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடிய போட்டியாக இந்த டி20 போட்டி திகழ்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ மூலமாக ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. 

Advertisement

இந்த தொடரில் ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மும்பை இந்தியன்ஸ் அணியை அறிமுகம் செய்தது. அதே போன்று, தென் ஆப்பிரிக்கா 20 (எஸ்ஏ20) தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் என்றும், ஐஎல்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் என்றும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி என்றும் ரிலைன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு அணியாக அறிமுகம் செய்தது.

Advertisement

அந்த வரிசையில் தற்போது கோடையில் நடக்க இருக்கும் மேஜர் கிரிக்கெட் லீக் 2023 தொடரில் ரிலைன்ஸ் நிறுவனம், தங்களது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் என்ற அணியின் உரிமத்தை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 மேஜர் கிரிக்கெ லீக் தொடரின் தொடக்க விழாவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பங்கேற்கிறது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறுகையில், “வளர்ந்து வரும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவின் முதல் கிரிக்கெட் லீக்கில் நுழைந்ததன் மூலம், அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு கிரிக்கெட்டின் உலகளாவிய பிராண்டாக மும்பை இந்தியன்ஸை நிறுவ முடியும் என்று நம்புகிறேன். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு புதிய தொடக்கமாகும். மேலும் இந்த லீக்கின் மூலம் முன்னோக்கிச் செல்லும் அற்புதமான பயணத்தை எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News