ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் சிரமப்பட்டு வருகிறார். கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச க்ளத்திற்கு திரும்பாமல் உள்ளார்.
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப் பெற்று வரும் ஜஸ்பிரித் பும்ரா, ஐபிஎல் தொடரின் முதலிரண்டு வாரங்கள் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜஸ்பிரித் பும்ராவின் மருத்துவ அறிக்கைகள் நான்றாக இருப்பதுடன், அவர் தனது பந்து வீச்சு பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இருப்பினும் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் அவர் பந்துவீச சாத்தியமில்லை என்றும், ஏப்ரல் முதல் வாரம் முதல் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மருத்துவக் குழு படிப்படியாக அதிகரிக்கும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் சில நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரால் பந்து வீச முடியாவில்லை என்றால், மருத்துவ குழு அவரை விளையாட அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அப்படி பார்த்தால் அவர் குறைந்தபட்சம் 3 முதல் 4 போட்டிகளைத் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியானது பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.