ஐபிஎல் 2025: ஹர்திக் உள்பட 4 நட்சத்திர வீரர்களை தக்கவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!

Updated: Thu, Oct 17 2024 12:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.  இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், அந்த அணியின் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை தக்கவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரை ஏலத்தில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக கடந்தாண்டு அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை அடுத்தும், அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதன் காரணமாக அந்த அணியில் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. மேற்கொண்டு அந்த அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் இல்லாத காரணத்தால், அந்த அணி லீக் சுற்றுடனே வெளியேறியது. இதனால் அந்த அணியில் பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் எழுந்தன. 

 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து விலகுவதாகவும், மும்பை அணியும் அவர்களை ரீட்டெய்ன் செய்ய விரும்பவில்லை எனவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஹர்திக், ரோஹித், சூர்யகுமார் யாதவ் என அனைத்து நட்சத்திர வீரர்களையும் அந்த் அணி தக்கவைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை