ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!

Updated: Fri, Feb 21 2025 17:16 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி  கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேலும் அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மும்பை இந்தியன்ச் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் சாராம்சத்தை குறிக்கும் நீலம் மற்றும் தங்க நிற ஜெர்சி அதன் அடையாளமாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நீல நிறம் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் அணியின் எல்லையற்ற திறனைக் குறிக்கிறது, அதே நேரத்தில் தங்க நிறம் பெருமை, சாதனை மற்றும் சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத முயற்சியைக் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. 

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஜெர்சி குறித்து பேசிய அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, "அன்புள்ள பால்டன்,2025 என்பது பாரம்பரியத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு. நீலம் மற்றும் தங்க நிறத்தை எங்களிடம் கொண்டு, மும்பையைப் போல விளையாட நாங்கள் களமிறங்குவோம். இது எங்கள் ஜெர்சி மட்டுமல்ல.இது உங்களுக்கு ஒரு வாக்குறுதி. வான்கடேயில் சந்திப்போம்" என்று அவர் கூறியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை