உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேச அணிகளும் மோதின.

Advertisement

மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரி மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சதமடித்துமே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே அடித்தது. 

Advertisement

அதன்பின் 68 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 281 ரன்கள் அடித்தது. மொத்தமாக 349 ரன்கள் முன்னிலை பெற்றது மத்திய பிரதேச அணி. 350 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்கால் அணி 2ஆவது இன்னிங்ஸில் 175 ரன்கள் மட்டுமே அடித்து 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கானின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 393 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தர பிரதேச அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே அடித்தது. 213 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 533 ரன்களை குவித்த நிலையில், 4ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து வரும் 22ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News