ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு அக்டோபர் 31 தேதியே கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது கேப்டனை தக்கவைக்காமால் விடுவித்துள்ளதுடன், 4 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அக்ஸர் படேலை ரூ.16.50 கோடிக்கும், குல்தீப் யாதவை ரூ.13.25 கோடிக்கும் தக்கவைத்துள்ள நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸை ரூ.10 கோடிக்கும், ஆபிஷேக் போரலை ரூ. 4 கோடிக்கும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இதனால் ஏலத்தில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங்க் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவருடன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வேனுகோபால் ராவும் நியமனம் செய்யப்பட்டார். மேற்கொண்டு இருவரும் இணைந்து ஐஎல்டி20, மேஜர் லீக் கிரிக்கெட் உள்ளிட்ட தொடர்களில் பணியாற்றியுள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 86 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.