ஐசிசி அண்டர்19 வீரர்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்து மீண்டு ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. 

Advertisement

அந்தவகையில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முஷீர் கானின் அபாரமான சதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களைக் குவித்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் 13 பவுண்டரி, 3 சிக்சர்களும் 131 ரன்களைக் குவித்தார். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய முஷீர் கான் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

 

இந்நிலையில், இப்போட்டியில் முஷீர் கான் அடித்த சிக்சர் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தேனியின் அடையாள ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்து முஷீர் கான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் முஷீர் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News