அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய 19 அணியை எதிர்த்து, அயர்லாந்து அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தியது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷினி குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதார்ஷ் சிங் 17 ரன்களிலும், அர்ஷினி குல்கர்னி 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்ன இணைந்த முஷீர் கான் - கேப்டன் உதய் சஹாரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 156 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் உதய் சஹாரன் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தினார். 

அதன்பின் 9 பவுண்டரி, 4சிக்சர்கள் என 118 ரன்கள் எடுத்த நிலையில் முஷீர் கான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆரவல்லி அவனீஷும் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளைக் இழந்து 301 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டுகளையும், ஜான் மெக்னலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News