BAN vs NZ: நியூசிலாந்திற்கு எதிராக முதல் டி20 வெற்றியை பெற்றது வங்கதேசம்!

Updated: Wed, Sep 01 2021 18:28 IST
Image Source: Google

வங்கதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 16.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அதிலும் அந்த அணியில் டாம் லேதம், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் முகமது நைம், லிட்டன் தாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தர். பின்னர் களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் தனது பங்கிற்கு 25 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதைத்தொடர்ந்து விளையாடிய முஷ்பிக்கூர் ரஹீம் - மஹ்முதுல்லா இணை வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் 15 ஓவர்களில் வங்கதேச அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலைப் பெற்றதுடன், நியூசிலாந்து அணிக்கெதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை