எனது ஆட்டத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Jul 17 2022 11:39 IST
Image Source: Google

இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக கருதப்படுபவர் சூர்யகுமார் யாதவ். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கூட சதமடித்து அசத்தினார் சூர்யா. இந்நிலையில் இப்போது இந்திய ஒருநாள் அணியிலும் விளையாடி வருகிறார். 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது.

இது குறித்து பேட்டியளித்துள்ள சூர்யகுமார் யாதவ் "டி20 போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, என்னுடைய அணுகுமுறை ஒன்றுதான். அதுதான் என்னுடைய இயல்பான ஆட்டமுறை. அதை எப்போதும் நான் மாற்றிக்கொள்ளமாட்டேன். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடர்ந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தவே நான் விரும்புவேன்.

டி20 போட்டியில் சதமடித்தது மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. என்னிடம் இருந்து எப்போதும் ரன்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் புரிகிறது. நான் சிறப்பாக செயல்பட்டாலும், எப்போதெல்லாம் அணி வெற்றிபெறுகிறதோ அப்போதெல்லாம் எனக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை