BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!

Updated: Tue, Sep 17 2024 12:59 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

இதனால், மூன்றாவது முறையாகவும் இந்திய அணி இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற கருத்துகளை ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தவரிசையில் தற்சமயம் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள லையன், “நாங்கள் கடைசியாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பய்ணம் செய்து முடித்ததில் இருந்து நான் இந்தத் தொடரைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன், அவர்கள் அதைப் பற்றிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் இந்த தொடரை வெல்ல வேண்டும் என நான் நீண்டகாலமாக காத்திருக்கிறேன். 

அதனால் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான எனது கணிப்பானது ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்வதுடன், இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து அசத்தும். மேலும் இதற்கு எங்கள் பேட்டர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் போன்றவர்களுடன் அனைத்து டாப் ஆர்டரும் சிறப்பாக விளையாட வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் எனக்கு அவர்களிடம் இருந்து 101 அல்லது 107 ரன்கள் வேண்டாம், எனக்கு அவர்கள் 180 மற்றும் 200 ரன்கள் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். நாதன் லையனில் இந்த கருத்தானது தற்சமயம் பேசுபொருளாக மாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லையன் 530 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை