WPL 2025: வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!

Updated: Sun, Mar 16 2025 08:38 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மரிஸான் கேப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதித்துள்ளது. இதையடுத்து கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் அந்த அணி வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன்படி இப்போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்களைச் சேர்த்ததன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது 1000 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்கலைக் குவித்த வீராங்கனை எனும் சாதனையையும் நாட் ஸ்கைவர் பிரண்ட் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்கள்

  • நாட் ஸ்கைவர் பிரண்ட் - 1027
  • எல்லிஸ் பெர்ரி - 972
  • மெக் லெனிங் - 952
  • ஷஃபாலி வர்மா - 865
  • ஹர்மன்ப்ரீத் கவுர் - 851
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை