நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதா அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் இணைந்த மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை மலமளவென உயர்த்தினர். இதில் விக்ரம்ஜித் சிங் 14 ரன்களுக்கும், மேக்ஸ் ஓடவுட் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஸாக் லியான், ஆர்யன் தத், நோஹா கிராஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் ரியான் கெலின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 36 ரன்களைச் சேர்க்க, அவருக்கு துணையாக கைல் கெலின் 16 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இதன் காரணமாக நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. அமெரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்மீத் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் மற்றும் சைதேஜா முக்கமல்ல இணை அதிரடியாக தொடங்கினர். இதில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் முக்கமல்லாவுடன் இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முக்கமல்ல தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் 13 ரன்களுக்கும், நிதிஷ் குமார் ரன்கள் ஏதுமின்றியும், ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சால்விக் 5 ரன்களுக்கும், ஜஸ்தீப் சிங் 12 ரன்களுக்கும், யாஷிர் முகமது ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, அமெரிக்க அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுகளையும், டேனியல் டொரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News