நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், நெதர்லாந்தை பேட்டிங் செய்யவும் அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

Advertisement

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடவுட் 28 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் இணைந்த மைக்கேல் லெவிட் - கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய லெவிட் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கேல் லெவிட் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சாக் லயன் கேஷட், கைல் கெலின் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் ஷால்விக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு தொடக்கமே சிற்ப்பாக அமையவில்லை. அணியின் கேப்டன் மொனாங்க் படேல் 14 ரன்களுக்கும், ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு ரன்னிலும், நிதீஷ் குமார் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 33 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஆரோன் ஜோன்ஸ் - ஷயான் ஜகாங்கீர் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இருவரும் இணைந்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

பின்னர் 34 ரன்களில் ஆரோன் ஜோன்ஸும், 37 ரன்களிலும் ஷயான் ஜஹாங்கீரும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அமெரிக்க அணியானது 15.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 115 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் விக்ரம்ஜித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 102 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News