ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான் மாலிக்; வைரல் காணொளி!

Updated: Thu, Jan 05 2023 22:19 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று புனே நகரில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் துவக்க ஜோடி பதும் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் முதல் விக்கட்டுக்கு 8.2 ஓவரில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். குசால் மெண்டிஸ் அரை சதம் அடித்து வெளியேறினார். பதும் நிஷங்கா 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த ராஜபக்சே மற்றும் அசலங்கா இருவரையும் உம்ரான் மாலிக் வெளியேற்றி வைத்தார். இதற்கு அடுத்து வந்த ஹசரங்காவை தனது மிரட்டல் வேகப்பந்து வீச்சின் மூலம் கிளீன் போல்ட் செய்து முதல் பந்திலையே வெளியேற்றி அசத்தினார். 

இலங்கை அணி ஒரு புறம் திடீரென சரிந்தாலும் இந்திய அணியுடன் சிறப்பாக ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கையணியின் கேப்டன் சனகா இந்த ஆட்டத்திலும் பட்டையைக் கிளப்பினார். 22 பந்துகளில் ஆறு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி உடன் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

 

இந்நிலையில் அதிவேகமாக பந்துவீசி ஸ்டம்புகளை பறக்க விட்ட உம்ரான் மாலிக்கின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை