BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவினால், வங்கதேச அணிக்கெதிராக முதல்முறையாக டி20 தொடரை இழக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வங்கதேசம்: முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மேஹதி ஹசன், முகமது சைஃபுதீன், நசும் அஹ்மது, முஸ்தாபிசூர் ரஹ்மான்
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
நியூசிலாந்து: ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதம் (கே), காலின் டி கிராண்ட்ஹோம், ஹென்றி நிக்கோலஸ், டாம் பிளண்டெல், கோல் மெக்கோன்சி, ஸ்காட் குகலீன், அஜாஸ் பட்டேல், ஜேக்கப் டஃபி.