ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!

Updated: Thu, Aug 25 2022 07:59 IST
New Zealand name squad for Australia ODIs, fit-again Matt Henry returns (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் காயம் காரணமக கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியை வழிநடத்துகிறார். 

அதேபோல் காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் விளையாடமால் இருந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி இத்தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேவேளையில் கைல் ஜேமிசன், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரை தவறவிடுகின்றனர்.

அதனை சரிசெய்யும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, லோக்கி ஃபெர்குசன், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம் , டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், டிம் சௌதி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை