NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Thu, Dec 07 2023 12:44 IST
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு! (Image Source: Google)

நியூசிலாந்து அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து வங்கதேச அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17ஆம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லேதம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், இஷ் சோதி, கைல் ஜேமிசன், வில் யங், ஃபின் ஆலன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

மேலும் அறிமுக வீரர்களாக ஆதித்யா அசோக், ஜோஷ் கிளார்க்சன், வில்லியம் ஓ'ரூர்க் ஆகியோர் ஒருநாள் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டேரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ், டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லேதம்(கேப்டன்), ஆதித்யா அசோக் (2 & 3 போட்டிக்கு மட்டும்), ஃபின் ஆலன், டாம் பிளன்டெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி (முதல் போட்டிக்கு மட்டும்) , வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை