INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Oct 22 2024 08:55 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

அதேசமயம் இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியானது 4 லீக் போட்டிகளில் இரண்டு வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதிலும் குறிப்பாக தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியுடன்ம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடமும் என இந்திய அணி தோல்வியைத் தழுவியதன் கரணமாக லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது அக்.24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இத்தொடரிலும் இந்திய மகளிர் அணியை ஹர்மன்பீரித் கவுர் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த அணியின் துணைக்கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா தொடர்கிறார். அதேசமயம் ஆஷா சோபானா,பூஜா வஸ்திரேகர், ரிச்சா கோஷ் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீராங்கனைகள் தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாகூர், பிரியா மிஸ்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சோஃபி டிவைன் தலைமையிலான இந்த அணியில், சூஸி பேட்ஸ், ஈடன் கார்சன், இஸபெல்லா கஸ், ஜெஸ் கெர், ஜார்ஜியா பிளிம்மர், மேடி கிரீன், புரூக் ஹாலிடே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

நியூசிலாந்து மகளிர் அணி: சோஃபி டிவைன் (கே), சூஸி பேட்ஸ், ஈடன் கார்சன், லாரன் டவுன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, பாலி இங்கிலிஸ், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், மெலி கெர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹுஹு.

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா, உமா செத்ரி, சயாலி சத்கரே, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை

  • அக்டோபர் 24 - முதல் ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
  • அக்டோபர் 27 - இரண்டாவது ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
  • அக்டோபர் 29 - மூன்றாவது ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை