இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

Advertisement

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவன் கான்வே அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் டாம் லேதம் வீரராக களம் இறங்கினார்.சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம் லேதம், ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

Advertisement

பின் களமிறங்கிய அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 14 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி 163 பந்தில் 11 பவுண்டரியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்தார்.

மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக போட்டியில் சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும், நியூசிலாந்து சார்பில் முதல் வீரர் என்ற சாதனையையும் டேவன் கான்வே படைத்துள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே 129 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த வீரர்கள்

  • ஹாரி கிரஹாம் 107 AUS v ENG 1893
  • ஜான் ஹாம்ப்ஷயர் 107 ENG v WIS 1969
  • சவுரவ் கங்குலி 131 IND v ENG 1996
  • ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 112 ENG v NZL 2004
  • மாட் ப்ரியர் 126 இல்லை ENG v WIS 2007
  • டெவன் கான்வே* NZL v ENG 2021

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News