வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜேசன் ஸ்மித் மற்றும் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய குவேனா மபாகா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

அதேபோல், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரோவ்மன் பாவெல் தலைமையிலான இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஜான்சன் சார்லஸ் என நட்சத்திர வீரர்களுக்கு அணியின் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை படைக்கவுள்ளார். அதன்படி, இத்தொடரில் அவர் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய 3ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். இதுவரை 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 132 சிக்ஸர்களை விளாசி தற்போது 6ஆம் இடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 173 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 137 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 136 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 134 சிக்ஸர்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ்: ரோவ்மேன் பவல் (கே), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானாஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்ட், ஷிம்ரான் ஹெட்மையர், ஃபேபியன் ஆலன், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், ஓபேத் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.

Advertisement

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கே), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனவன் ஃபெரீரா, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாத் வில்லியம்ஸ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News