கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!

Updated: Sun, Dec 29 2024 08:09 IST
Image Source: Google

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டனது. அதன்பின் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

நேற்றைய நாள் முடிவில் நிதீஷ் குமாரின் குடும்பத்தினர் அவரை ஹோட்டலில் சென்று சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது நிதிஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கினார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தின்ரும் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினர் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கிய காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால், ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை