உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!

Updated: Tue, Aug 27 2024 10:31 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் செய்ல்பட்டுள்ளார். இந்நிலையில் இவர், தற்போதை வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார். 

அதன்பின் அணியின் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், நான்காவது இடத்திற்கு விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள அவர், இந்த அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்தை நியமித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு சஞ்சய் பங்கர் வாய்ப்பினை வழங்கியுள்ளார். 

அவரைத் தவிர்த்து இந்திய ஆல் அரவுண்டர்களான ரவீந்திரா ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அகியோருக்கு இடம் கொடுத்திருக்கும் அவர், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருடன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த உலக டெஸ்ட் லெவன் அணியில் சஞ்சய் பங்கர் இடமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சஞ்சய் பங்கர் உருவாக்கியுள்ள இந்த அணியில் மொத்தம் 7 இந்திய வீரர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோரை சஞ்சய் பங்கர் தேர்வு செய்யவில்லை என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும் ஒன்றாக உள்ளது. 

 

இது தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டு வீரர்களும் சஞ்சய் பங்கரின் சிறந்த பதினொன்றில் இடம் பெறவில்லை. அந்தவகையில், 43 டெஸ்டில் 187 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லையனும், 42 டெஸ்டில் 175 விக்கெட்டுகளை வீழ்த்திய பேட் கம்மின்ஸிற்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எந்த வீரரும் இந்த அணியில் இடம்பெறவில்லை.

Also Read: Funding To Save Test Cricket

சஞ்சய் பங்கரின் உலக டெஸ்ட் லெவன்: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், விராட் கோலி, ரிஷப் பந்த், பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை