இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தொடர் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை அடித்து அசத்தியது. பின்னர் 411 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 250 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. நம்மில் பலரும் கோலி, ரூட், வில்லியம்சன், பாபர் அசாம் அவர்களை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் ரோகித் சர்மா அனைவரையும் விட வித்தியாசமானவர். எதிரணியின் பந்துவீச்சு எப்படி இருந்தாலும் அதனை எளிதாக மாற்றி அதிரடியாக ரன்களை குவித்து அசத்துகிறார். அவரது சிறப்பான அதிரடி துவக்கம் காரணமாகவே இந்திய அணி பெரிய ரன்களை குவிக்கிறது. ரோகித் சர்மா தற்போது இருக்கும் பார்மில் எந்த ஒரு பவுலருக்குமே சற்று கடினமாக தான் இருக்கும்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News