ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!

Updated: Mon, May 27 2024 20:04 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடராக இருந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில் பல்வேறு சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தொடரின் இறுத்திப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்களைக் கொண்டு முன்னாள் வீரார்கள் தொடரின் சிறந்த அணியை கணித்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார்.  அவர் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கேகேஆர் அணியின் சுனில் நரைனையும், ஆர்சிபி வீரர் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் இடத்திற்கு ராஜத் பட்டிதாரையும், நான்காம் வரிசையில் ஷிவம் தூபேவும், ஐந்தாம் இடத்தில் ஹென்றிச் கிளாசெனும், 6ஆம் இடத்தில் கேமரூன் க்ரீணையும் தேர்வுசெய்துள்ளார். மெற்கொண்டும் நிக்கோலஸ் பூரன், அண்ட்ரே ரஸல் ஆகியோரையும் தேர்வு செய்வதுள்ள அவர், பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்தி சரஹா, ஜஸ்ப்ரித் பும்ரா, நடராஜன் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளார். 

கேவின் பீட்டர்சன் தேர்வு செய்த ஐபிஎல் அணி: சுனில் நரைன், விராட் கோலி, ராஜத் பட்டிதார், ஷிவம் துபே, ஹென்ரிச் கிளாசன், கேமரூன் கிரீன், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, தங்கராசு நடராஜன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை