ஐபிஎல் 16ஆவது சீசனின் இரண்டாம் பாதியின் தொடக்க போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

Advertisement

தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும்.

Advertisement

இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்பொழுது மேக்ஸ்வெல், லோம்பரர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது விக்கட்டுகளை வீழ்த்தி, நான்கு ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டும் தந்து வரும் சக்கரவர்த்தி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கொல்கத்தா அணி இதற்கு முன் கடைசி ஆட்டத்தில் தன் சொந்த மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் 49 ரன்களை வருண் சக்கரவர்த்தி விட்டுக்கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்து பேசுகையில், “கிரிக்கெட் விளையாட்டு இப்படித்தான். கடந்த போட்டியில் நான் 49 ரன்கள் விட்டுக் கொடுத்தேன். இன்று எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. எனது கவனம் துல்லியமாக பந்து வீசுவதில்தான் இருக்கிறது. பந்துவீச்சில் வெரைட்டிகளை கொண்டு வருவதில் கிடையாது.

நான் பந்துவீச்சில் நிறைய வேலை செய்து வருகிறேன். இதற்காக நான் ஏசி.பிரதீபன் மற்றும் அபிஷேக் நாயர் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாய் பிறந்த என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு குழந்தையைப் பார்ப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News