சஞ்சு சாம்சனிற்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல - ராபின் உத்தப்பா கருத்து!

Updated: Tue, Jul 23 2024 22:16 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதே நேரத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்ற சஞ்சு சாம்சனிற்கு டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் கடந்த ஒன்றைரை ஆண்டுகலாமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணி தேர்வாளர்கள் மீண்டும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ்ருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த மூன்று வீரர்களின் நீக்கமானது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சனின் பார்வையில், அவருக்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்லவா? ஒரு வீரராக அவர் கடைசியாக விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் சஞ்சு சாம்சனின் ஒருநாள் போட்டிகளிளுடைய எண்ணிக்கையானது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மீண்டும், தலைமைக் குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். எனவே இந்த குழுவில் மாற்றம் வரும் வரை நாம் கொஞ்சம் நேரத்தைக் கொடுக்க வேண்டும்.  ஏனெனில் சஞ்சு சாம்சன் மற்ற வீரர்களுடன் ஏற்பட்ட போட்டியால் வெளியேற்றப்படவில்லை. கண்டிப்பான அவருக்கான நேரத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைக்கும் போது அவர் அதை இறுக பிடித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை