MI New York vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

இதில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்களும், சிறப்பான பந்துவீச்சாளர்களுடம் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

NY vs TEX Match Details

மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
நேரம் - ஜூன் 14, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

Oakland Coliseum, California Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு 9 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மொத்தமாக 33.5 ஓவர்களில் 415 ரன்களும், 15 விக்கெட்டுகளும் வீழ்த்தபட்டுள்ளன. இதனால் பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது ரன் குவிப்பிற்கு உதவலாம்.

NY vs TEX: Where to Watch?

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

NY vs TEX Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 06
  • டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்-05
  • எம்ஐ நியூயார்க் - 00    
  • முடிவில்லை- 01

NY vs TEX Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), டெவான் கான்வே
  • பேட்டர்கள்- கீரோன் பொல்லார்ட், மிட்செல் மார்ஷ், ஃபாஃப் டு பிளெசிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் (துணை கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல்
  • பந்துவீச்சாளர்கள்- டிரென்ட் போல்ட், நூர் அகமது.

NY vs TEX Predicted Playing 11

MI New York XI : குயின்டன் டி காக், மோனாங்க் படேல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஹீத் ரிச்சர்ட்ஸ், கீரோன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல், ஜார்ஜ் லிண்டே, எஹ்சன் அடில், நோஸ்டுஷ் கெஞ்சிகே, நவீன் உல் ஹக், டிரென்ட் போல்ட்.

Texas Super Kings XI : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டெவோன் கான்வே, மிட்செல் மார்ஷ், சமித் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேரில் மிட்செல், மிலிந்த் குமார், ஜோசுவா டிரம்ப், நந்த்ரே பர்கர், நூர் அகமது, ஆடம் மில்னே.

NY vs TEX Dream11 Prediction, NY vs TEX Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, NY vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, MI New York vs Texas Super Kings

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News