NZ vs AUS, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!

Updated: Sun, Mar 10 2024 12:07 IST
Image Source: Google

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷாக்னேவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யங் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டாம் லேதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 73 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரச்சினுடன் இணைந்த டேரில் மிட்செலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவும் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் குகெலீஜ்ன் 44 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 372 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 279 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 17 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பென் சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை