நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பே ஓவல் மைதானத்தில் ஜவனரி 1ஆம் தேதி தொடங்கியது. 

Advertisement

இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேச அணி 328 ரன்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 122 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி  2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 153 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இதில் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமதுல் ஹசன் 78 ரன்களிலும்,கேப்டன் மொமினுல் ஹக் 88 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி அணியை முன்னிலைப் படுத்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 86 ரன்களில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைக் குவித்துள்ளது. 

Advertisement

வங்கதேச அணி தரப்பில் யாசிர் அலி 11 ரன்களுடனும், மெஹதி ஹசன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட், நெய்ல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 

இதையடுத்து 73 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News