நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி.

Advertisement

இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேதம் 186, கான்வே 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

Advertisement

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. 

இதில் அதிகபட்சமாக யாசிர் அலி 55 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசி. கேப்டன் டாம் லேதம் வங்கதேச அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொல்வாரா அல்லது தனது அணியின் 2-வது இன்னிங்ஸைத் தொடர்வாரா என்பது நாளை தெரிய வரும். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News