வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!

Updated: Sun, Dec 17 2023 15:26 IST
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்! (Image Source: Google)

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 44 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஓராண்டாக டி20 அணியில் இடம்பிடிக்காம இருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்ப்ட்டுள்ளார். மேலும் இந்த அணியில் டெரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

அதேசமயம் டெவான் கான்வே, லோக்கி ஃபர்குசன், டாம் லேதம் ரச்சின் ரவீந்திரா, டிரெண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலென், மார்க் சாம்ப்மென், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், பென் சீயர்ஸ், டிம் செய்ஃபர்ட், இஷ் சோதி, டிம் சௌதீ.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை