New Zealand vs England 1st Test Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள  இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்று அறிவிக்கப்பட்டது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

NZ vs ENG 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இங்கிலாந்து
  • நேரம் - அதிகாலை 3:30 மணி (இந்திய நேரப்படி)
  • இடம் - ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்

NZ vs ENG 1st Test Pitch Report

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 04 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 09 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 284 ரன்களாகவும், கடைசி இன்னிங்ஸ் சராசரி 179 ரன்களாகவும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 659 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs ENG 1st Test: Where to Watch?

Advertisement

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் அமேசன் பிரையம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

NZ vs ENG Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 112
  • நியூசிலாந்து - 13
  • இங்கிலாந்து - 52
  • முடிவில்லை - 47

New Zealand vs England 1st Test Probable Playing XI

Advertisement

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, டிம் சௌதீ, வில் ஓ ரூர்க்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கே), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.

NZ vs ENG 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஒல்லி போப், டாம் பிளெண்டல்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட் (கேப்டன்), ஹாரி புரூக், கேன் வில்லியம்சன், டெவான் கான்வே (துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் பிலீப்ஸ், பென் ஸ்டோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - வில்லியம் ஓ ரூர்க், மேட் ஹென்றி, கிறிஸ் வோக்ஸ்
Advertisement

NZ vs ENG 1st Test Dream11 Prediction, NZ vs ENG Dream11 Prediction, Today Match NZ vs ENG, NZ vs ENG Test Series, NZ vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs England

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News