New Zealand vs Pakistan 1st T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. 

Advertisement

இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக  நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இத்தொடரின் மூலம் இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

NZ vs PAK, 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் -  ஹாக்லே ஓவல் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
  • நேரம் - மார்ச் 16, காலை 6. 45 மணி (இந்திய நேரப்படி)

NZ vs PAK, 1st T20I: Pitch Report

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 14 டி20 போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 157 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 208 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs PAK: Where to Watch?

Advertisement

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். இது தவிர, அமேசான் பிரைம், சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளிலும் இந்த போட்டியை ரசிகர்கள் காண முடியும்.

NZ vs PAK T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 44
  • பாகிஸ்தான் -23
  • நியூசிலாந்து - 19
  • முடிவில்லை - 02

NZ vs PAK 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டிம் செய்ஃபெர்ட்
  • பேட்ஸ்மேன்கள் - உஸ்மான் கான், ஆகா சல்மான், ஃபின் ஆலான்
  • ஆல்-ரவுண்டர்கள் - சதாப் கான், மார்க் சாப்மேன், ஜிம்மி நீஷம் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல்
  • பந்து வீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் (துணைக்கேப்டன்), பென் சீயர்ஸ்
Advertisement

New Zealand vs Pakistan  Probable Playing XI

New Zealand Probable Playing XI: மிட்செல் ஹே, ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், மார்க் சாப்மேன், டிம் ராபின்சன், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, கைல் ஜேமீசன், பென் சியர்ஸ்.

Pakistan Probable Playing XI : உஸ்மான் கான், அப்துல் சமத், இர்ஃபான் கான், நவாஸ், குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஆகா சல்மான் (கேப்டன்), அப்ரார் அகமது, அப்பாஸ் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

Advertisement

NZ vs PAK T20I Dream11 Prediction, NZ vs PAK Dream11 Prediction, Today Match NZ vs PAK, NZ vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Pakistan

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News