NZ vs PAK, 2nd T20I: செஃபெர்ட், ஆலன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்த போட்டியானது 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஹசன் நவாஸ் ரன்கள் ஏதுமின்றியும், முகமது ஹாரிஸ் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிட கேப்டன் சல்மான் ஆகா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இர்ஃபான் கான் 11 ரன்களிலும், குஷ்தில் ஷா 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் சல்மானுடன் இணைந்த ஷதாப் கான் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சல்மான் அலி ஆகா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்திருந்த ஷதாப் கானும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அப்துல் சமாத் 11 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷாஹீன் அஃப்ரிடி
இதன்மூலம் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்மி நீஷம், இஷ் சோதி, பென் சீயர்ஸ் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் செஃபெர்ட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்த ஃபின் ஆலனும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் ஹெய் 21 ரன்களையும், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிம் செஃபெர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.