New Zealand vs Pakistan 4th T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இந்த டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி நாளை (மார்ச் 23)  மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

Advertisement

NZ vs PAK 4th T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் -  பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்
  • நேரம் - மார்ச் 23, காலை 11.45 மணி (இந்திய நேரப்படி)

NZ vs PAK 4th T20I, Pitch Report

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி மவுண்ட் மவுஙானுய் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 19 டி20 போட்டிகளில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 155 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 136 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs PAK T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 47
  • பாகிஸ்தான் -24
  • நியூசிலாந்து - 21
  • முடிவில்லை - 02
Advertisement

NZ vs PAK 4th T20I: Where to Watch?

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். இது தவிர, அமேசான் பிரைம், சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளிலும் இந்த போட்டியை ரசிகர்கள் காண முடியும்.

NZ vs PAK 4th T20I, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டிம் செஃபெர்ட் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன் - ஃபின் ஆலன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மேன், ஆகா சல்மான் (துணை கேப்டன்), ஷதாப் கான், குஷ்தில் ஷா
  • பந்து வீச்சாளர்கள் - இஷ் சோதி, பென் சியர்ஸ், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.
Advertisement

New Zealand vs Pakistan Probable Playing XI

New Zealand Probable Playing XI: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹேய், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, பென் சியர்ஸ்

Pakistan Probable Playing XI: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் அகா(கேப்டன்), இர்ஃபான் கான், குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்துல் சமத், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப்

Advertisement

NZ vs PAK Dream11 Prediction, NZ vs PAK 4th T20I, NZ vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs PAK Pitch Report, New Zealand vs Pakistan Probable Playing XI, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, New Zealand vs Pakistan

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News