New Zealand vs Pakistan 1st ODI Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (மார்ச் 29) முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

NZ vs PAK 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  நியூசிலாந்து vs பாகிஸ்தான்
    இடம் -  மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானம், நேப்பியர்
    நேரம் - மார்ச் 29, அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

NZ vs PAK 1st ODI Live Streaming Details

Advertisement

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். இது தவிர, அமேசான் பிரைம், சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளிலும் இந்த போட்டியை ரசிகர்கள் காண முடியும்.

NZ vs PAK: Ground Pitch Report

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 49 ஒருநாள் போட்டிகளில் 19 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 26 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 233 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 373 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs PAK: Head-to-Head In ODI

  • Matches: 119
  • Pakistan: 61
  • New Zealand: 54
  • No Result: 3
  • Tied: 1

NZ vs PAK Possible XIs

New Zealand: ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), நாதன் ஸ்மித், நிக் கெல்லி, வில்லியம் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், ஜேக்கப் டஃபி

Advertisement

Pakistan: இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், ஆகா சல்மான், முகமது ரிஸ்வான் (கேப்டன்), தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, அப்ரார் அகமது

NZ vs PAK 1st ODI: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான்
  • பேட்டர்: பாபர் அசாம், வில் யங், டேரில் மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள்: மைக்கேல் பிரேஸ்வெல் (துணை கேப்டன்), சல்மான் ஆகா (கேப்டன்), குஷ்தில் ஷா
  • பவுலர்கள்: நசீம் ஷா, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ'ரூர்க், நாதன் ஸ்மித்

NZ vs PAK 1st ODI Dream11 Prediction, NZ vs PAK Dream11 Prediction, Today Match NZ vs PAK, NZ vs PAK Series, NZ vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Pakistan

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News