நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Jan 13 2024 18:29 IST
Image Source: CricketNmore

ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் கேன் வில்லியம்சன், டெரில் மிட்செல், டிம் சௌதீ, பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அசத்தியுள்ளதால் இப்போட்டியில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  •     இடம் - செடன் பார்க் மைதானம், ஹாமில்டன்
  •     நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரத்தில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 35
  •     நியூசிலாந்து -14
  •     பாகிஸ்தான் - 20
  •     முடிவில்லை - 01

பிட்ச் ரிப்போர்ட்

ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவது கடினம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் பேட்டர்கள் ஆதிக்கத்தை செலுத்து பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார்கள்

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டெவான் கான்வே, ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, இஷ் சோதி.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், ஆசம் கான், இஃப்திகார் அகமது, அமீர் ஜமால், ஷாஹீன் அஃப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: டெவான் கான்வே, முகமது ரிஸ்வான்
  •     பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஃபின் ஆலன், பாபர் ஆசாம்,  ஃபகர் ஜமான்
  •     ஆல்-ரவுண்டர்கள்: டேரில் மிட்செல், இஃப்திகார் அகமது
  •     பந்துவீச்சாளர்கள்: ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், டிம் சௌதீ

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை