பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது ஏற்கெனவே  நியூசிலாந்து அணி தொடரை வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  •     இடம் -  ஹக்லி ஓவல் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
  •     நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரத்தில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 37
  •     நியூசிலாந்து -16
  •     பாகிஸ்தான் - 20
  •     முடிவில்லை - 01
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கு பந்து பேட்டிற்கு வரும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும். மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 முதல் 200 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

உத்தேச லெவன்

Advertisement

நியூசிலாந்து: டெவான் கான்வே, ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர்(கே), டிம் சௌதி, மேட் ஹென்றி, இஷ் சோதி, லோக்கி ஃபர்குசன்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், இஃப்திகார் அகமது, ஹசீபுல்லா கான், அமீர் ஜமால், ஷாஹீன் அஃப்ரிடி (கே), முகமது வாசிம் ஜூனியர், ஸமான் கான். 

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: டெவான் கான்வே, முகமது ரிஸ்வான், டிம் செய்ஃபெர்ட்
  •     பேட்டர்ஸ்: ஃபின் ஆலன், பாபர் ஆசாம்,  ஃபகர் ஸமான்
  •     ஆல்-ரவுண்டர்கள்: டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர்
  •     பந்துவீச்சாளர்கள்: ஷஹீன் அஃப்ரிடி, லோக்கி ஃபர்குசன், டிம் சௌதீ
Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News