தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும், கேன் வில்லியம்சன் சதமும் அடித்து அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் எட்வர்ட் மூர் - கேப்டன் நெய்ல் பிராண்ட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் நெய்ல் பிராண்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரேனார்ட் வான் டோண்டர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து எர்ட்வர்ட் மூர் 23 ரன்களுக்கும், ஹம்ஸா 22 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய் மூன்றாம் நாள் ஆட்டத்தை பெட்டிங்ஹாம் 29 ரன்களுடனும், பீட்டர்சென் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பெட்டிங்ஹாம் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கீகன் பீட்டர்சென் 45 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, மிட்செல் சாண்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 349 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 3 ரன்களுக்கும், டெவான் கான்வே 29 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் வழக்கம்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த அசத்திய ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இந்த போட்டியில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். அதன்பின் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 109 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதன்மூலம், நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேரில் மிட்செல் 11 ரன்களுடனும், டாம் பிளெண்டல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 528 ரன்கள் முன்னிலையுடன் நாளை நடைபெறும் 4ஆம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News